90s காதல்


 90s நண்பர்கள் சில பேர் கேட்டதனால் இந்த பதிவு..2k கிட்ஸுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.. நாம் சொப்பு சாமான்கள் முதல் இன்றைய டெக்னாலஜி வரை எல்லாத்தையும் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறோம்.. ஆனால் அவர்களுக்கு சொப்பு சாமான் என்றால் என்னவென்றே தெரியாது அதில் உள்ள இன்பமும் தெரியாது.. அவர்கள் பிறக்கும்போது மொபைல் போன் உடன் பிறந்தவர்கள் அதனால் அவர்கள் நம்மளை விட டெக்னாலஜி உயர்ந்தவர்கள் ஈசியாக வேலை கிடைக்கும் ஈசியாக திருமணம் நடக்கும்.. எந்த ஒரு தருணத்திலும் 90 ஸ் கிட்ஸ் திருமணம் ஆகவில்லை என்று எந்த நேரத்திலும் யோசிக்காதீர்.. இளையராஜா ஏ ஆர் ரகுமான் எம் எஸ் தோனி சச்சின் இவர்கள் எல்லாம் 80ஸ் 90சில் பிறந்தவர்கள் தான் பெரிதாக படிக்கவும் இல்லை அப்புறம் எப்படி சாதித்தார்கள்,?? அவர்கள் வேலையை அவர்கள் சரிதாக செய்தார்கள் இளையராஜாவிற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தது என்று எல்லாருக்கும் தெரியும் ஏ ஆர் ரகுமானுக்கு எந்த மாதிரி எதிர்ப்பு வந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.. ஜார்கன்ட் என்ற ரொம்ப பிற்போக்குத்தனமான ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவன் ஜெயிச்சது எல்லாருக்கும் தெரியும்.. அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை தனது வேலையில் அவர்கள் சரியாக செய்தார்கள்.. அதனால் எல்லாரும் ஏ ஆர் ரகுமான் இளையராஜா சச்சின் தோனி ஆகிவிட முடியாது.. ஒரு ஏ ஆர் ரகுமான் தான் ஒரு இளையராஜா தான் ஒரு சச்சின் தான் ஒரு தோனி தான்.. 90ஸ் கிட்ஸ் நண்பர்கள் நிறைய பேர் சொல்லுவது திருமணமாகவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்யுங்கள்.. தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் என்ன தான் என்னைய ஊற்றிக்கொண்டு உருண்டாலும் ஒற்ற மண்ணுதான் ஒட்டும்.. அதற்காக திருமணமே நடக்காது நான் ஜெயிக்கவே மாட்டேன் எனக்கு எதுவுமே நடக்காது அப்படி என்று எதுவும் கிடையாது நம்ம செய்ற வேலையை செஞ்சா நேரம் காலம் கூடி வரும் போது அது கண்டிப்பாக நமக்கு நடக்கும்.. நீங்கள் தொழில் செய்யலாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கலாம் அந்த வேலையை ரசித்து உண்மையாக நேசித்து அதில் முழு உழைப்பையும் போட்டு நீங்கள் வேலை செய்யுங்கள் உங்களுக்கான விலை உங்களை வந்தே சேரும் அதை யாராலும் தடுக்க முடியாது.. அன்பு மட்டுமே அனைத்தையும் கொடுக்கும் முத்தம் மட்டுமே மொத்தத்தையும் வெல்லும்.. அன்பு எல்லோருக்கும் கொடுங்கள் முத்தத்தை கொடுக்க வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுங்கள் ❤️❤️❤️❤️

Comments